புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (16:47 IST)

பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை – தமிழக இளைஞருக்கு 9 ஆண்டு சிறை

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது சக பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இந்திய இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரபு ராமமூர்த்தி என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் இந்தாண்டு தொடக்கத்தில் லாஸ் வேகாஸில் இருந்து டெட்ரியாட்  செல்லும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது நள்ளிரவில் தன்னருகில் இருந்த சகப் பெண் பயணிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

இதனால் பயந்த அந்தப் பெண் விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது ராமமூர்த்தி அரைகுறை ஆடையுடன் இருந்துள்ளார் இதனால் அவர் மீது  டெட்ரியாட் நகர போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 9 ஆண்டுகள் நீதிமண்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.