திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (17:57 IST)

பலூன் வழியே இணைய சேவை...புது முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்...

உலகில் தினமும் எண்ணற்ற மாற்றங்களும் கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக கென்யாவில் உலகிலேயே முதன் முறையாக வணிக ரீதியிலான பலூன் வழி இணைய்தள சேவை துவக்கப்பட்டுள்ளாது.

இந்நிலையில், கென்யாவில் உள்ள பாரிங்கோவில் உள்ள கிராமங்களுக்கு பலூன்கள் மூலமாக அதிவிரைவான   4 ஜி சேவையை கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூனுடன், கென்ய தொலைதொடர்பு நிறுவனம் இணைந்து மேறொண்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டில் வீசிய புயல் காற்றுக்குப் பிறகு  சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இணைய தளம் வழியே இணைக்க பலூன்கள் மற்றும்  யு.எஸ் டெலமாக் ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  இதனால் ஏராளமான மக்கள்  பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்த யோசனை தொழில்நுட்பத்தில் பின் தங்கிய கிராங்கங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.