புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (13:08 IST)

ஐவரி கோஸ்ட் பிரதமர் அமாடோ கோன் கோலிபாலி அமைச்சரவை கூட்டத்துக்குபின் உயிரிழப்பு - அதிர்ச்சியில் மக்கள்

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் நடந்த அமைச்சரவை கூட்டமொன்றில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கலந்துக்கொண்ட அந்நாட்டின் பிரதமரான அமாடோ கோன் கோலிபாலி அதற்கு பின்பு உயிரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வரும் அக்டோபர் மாதத்தில் அந்நாட்டில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளராக 61 வயதான அமாடோ கான் கோலிபாலி தேர்தெடுக்கப்பட்டு  இருந்தார். 
 
தற்போதைய அதிபரான அலசானி ஒட்டாரா மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று கூறியிருந்தார்.
 
இரண்டு மாதங்களாக பிரான்சில் தங்கியிருந்து இதய சிகிச்சை எடுத்துக் கொண்ட கோலிபாலி அண்மையில் தான் ஐவரி கோஸ்ட் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் மரணத்தால் நாடு துக்கத்தில் உள்ளதாக அதிபர் ஒட்டாரா தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கோலிபாலி உடல்நலன் குன்றியிருந்ததால், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு  அவர் இறந்துவிட்டதாகவும் அதிபர் தெரிவித்தார்.
 
பிரதமர் கோலிபாலியின் மரணம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், அங்கு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் குறித்தும் பல கேள்விகளை அது  எழுப்பியுள்ளது.