புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (21:34 IST)

உலகின் மிக பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலத்தில்...

உலகின் மிக பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. இதனை கிராஃப் டயமண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. 


 
 
இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது. 
 
இந்த வைரத்தின் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம் என கூறப்பட்டுள்ளது.
 
இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது.