செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (15:22 IST)

பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன் புகழாரம்

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 138வது பிறந்த நாள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.


 

 

சாதி, மூட நம்பிக்கை, ஆன்மீகம் ஆகியவற்றுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து மக்களிடையே இன்றளவும் போற்றப்படும் நபராக பெரியார் இருக்கிறார்.

அவரின் 138வது பிறந்த நாளான இன்று,  திமுக உட்பட பல அரசியல் கட்சிகளின் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் பெரியாரை பற்றிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம். 1879, செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.