உலகை உலுக்கும் கொரனா வைரஸ்: பீதியில் மக்கள்!

Coronovirus
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 19 ஜனவரி 2020 (15:48 IST)
சீனாவிலிருந்து பரவி வரும் கொரனா வைரஸ் என்னும் புதிய வைரஸால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

சீனாவின் உகான் மாகாணத்தில் கொரனா என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸுக்கு சீனாவில் இருவல் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் எதனால் உருவாகிறது மற்றும் இதன் அறிகுறிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இருவர் பலியாகியுள்ள நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

புதிய வைரஸ் தங்கள் நாடுகளுக்குள் புகுந்துவிட கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தனி கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்கா விமான நிலையங்களுக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள் உயர்தர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல சீனாவுக்கு செல்லும் பயணிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோலவே சீனா செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கும்படி மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாத சூழலில் இது தொற்றும் அபாயம் உள்ள நோயா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் எந்த பதிலும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :