வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (07:11 IST)

உலக கொரோனா 27.48 கோடி, இந்தியாவில் 42.77 லட்சம்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,484,574 பேராக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 19,585,140 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், கொரோனா வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் 896,796 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,485,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 193,534பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,277,584 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 72,816 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,321,420 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,147,794 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 127,001 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,355,564என்பதும் குறிப்பிடத்தக்கது