1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Woman in Russia kills 30 people and eats them

அட கொடுமையே? 30 பெண்களை கொன்று ஊறுகாய் போட்ட பெண்

ரஷ்யா
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 30 பெண்களை கொன்று தின்றதாக புகார் எழுந்ததை அடுத்து, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
ரஷ்யாவை சேர்ந்த இந்த பெண் தனது கணவரோடு சேர்ந்து ஒரு பெண்ணை கொன்றதற்காக கைது செய்யப்பட்டனர். அப்போது அந்த பெண்ணின் மொபைல் போனை ஆராய்ந்த போது கொல்லப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி அதனுடன் போட்டோ எடுத்திருந்தது தெரியவந்தது. 
 
இதனால், அவர்கள் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் அங்கு மனிதர்களின் உடல் பாகங்கள் ஃப்ரீசரிலும், ஊறுகாய் பாட்டில்களிலும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட் தீவிர விசாரணையில் இந்த பெண் ஏற்கனவே இது போன்று 30 பெண்களை கொன்று தின்றது அம்பளமாகியுள்ளது. 
 
எனவே, இந்த பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும், அவளது கணவருக்கு காச நோய் உள்ளதால் அவரை இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்....தீவிரவாதிகள் இருவர் பலி...