பதின்ம வயதில் கற்பை இழந்த பெண்... மனம் திறக்கிறார்..

pathma laksmi
Last Modified வியாழன், 27 செப்டம்பர் 2018 (20:02 IST)
அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளராக பணிபுரியும் பத்மலக்ஷ்மி (30) வருடங்களுக்கு முன்னரே ஓர் ஆண் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார்'' என பகிரங்கமாக ஒரு செய்திதாளில் கட்டுரை எழுதியுள்ளார் பத்மலக்ஷ்மி என்பவர்.

"அப்போது எனக்கு 16 வயது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் டேட்டிங் செய்த நபருடன் ஒரு மாலில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு 23 வயது. கல்லூரி சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது.

''நாங்கள் டேட்டிங் செய்ய துவங்கிய சில மாதங்களுக்கு பின்னர் புத்தாண்டு தினத்தின் மாலையில் என்னை அவர் பாலியல் வல்லுறவு செய்தார். நான் பாலியல் வல்லுறவுக்குள்ளான அன்று மது குடித்திருந்தேனா என நீங்கள் கேட்கலாம். குடிப்பதோ குடிக்காமல் இருப்பதோ அங்கு விஷயமல்ல. ஆனால் அன்றைய தினம் நான் மது அருந்தியிருக்கவில்லை. 'ஆனால் அன்றைய தினம் நான் முழு கை உடையில் இருந்தேன். எனது தோள்பட்டை மட்டும் தான் வெளியில் தெரிந்தது.

நாங்கள் இருவரும் இரண்டு பார்ட்டிகளுக்கு சென்றோம். அதன் பிறகு அவரது வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நான் சோர்ந்திருந்ததால் படுக்கையில் படுத்தவுடன் உறங்கிவிட்டேன்.
அதன் பின் எனது கால்களுக்கு இடையில் ஏதோ கத்தியை கொண்டு கிழிப்பதைப்போன்ற உணர்வும் வலுவான வலியும் இருந்தபோது நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் மேல் இருந்தார்.

என்ன செய்கிறாய்?' என கேட்டேன். 'கொஞ்ச நேரம்தான் வலிக்கும்' என்றார் அவர். அப்படிச் செய்யதே என கூறி கத்தினேன். கடுமையான வலியால் அழுதேன்.

அதன்பிறகு, அவர் '' தூங்கிக்கொண்டிருப்பதால் வலி குறைவாக இருக்கும் என எண்ணினேன்'' என்றார். அதன்பின்னர் என்னை அழைத்துச் சென்று எனது வீட்டில் விட்டார்.

நான் யாரிடமும் சொல்லவில்லை. அம்மாவிடமோ அல்லது நண்பர்களிடமோ கூட!'''முதலில் நான் அதிர்ச்சியடைந்தேன். பிறகு அது எனது தவறு என கருதினேன். நான் பெரியவர்களிடம் கூறினால் '' அவனது வீட்டில் உனக்கு என்ன வேலை?'' என கேட்டிருப்பார்கள். அப்போது இதனை பாலியல் வல்லுறவா உடலுறவா? எந்த வகையில் சேர்ப்பது என முடிவு செய்திருக்கவில்லை. நான் கன்னித் தன்மை இழந்துவிட்டேன் என்பது மட்டுமே நினைவில் இருந்தது.''

நான் எப்போதோ ஒருநாள் உடலுறவில் ஈடுபடும்போது அன்பை பகிர்ந்து கொள்வேன், அதன் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்வேன் என்பதே எனது எண்ணத்தில் இருந்தது. ஆனால் இந்நிகழ்வு அந்தவகையில் வராது.ஆனால், பிறகும் என்னுடைய முதலாமாண்டு கல்லூரி படிப்பின்போது இருந்த ஆண் நண்பர்களிடம் கூட நான் கன்னி என பொய் சொல்லியிருக்கிறேன்''.

''பதின்பருவத்தில் ஒருவர் செய்த தவறுக்கு ஒரு ஆண் தண்டனை அனுபவிக்கவேண்டுமா என கேட்கலாம். ஆனால் ஒரு பெண் அந்த தவறுக்கு தனது வாழ்நாள் முழுவதும் அதற்கான தண்டனையை அனுபவிக்கிறாள். ''
32 வருடங்களுக்கு பிறகு இதை கூறும் அந்த தொலைக்காட்சி பிரபலம் '' இதைப் பற்றி பேசுவதால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை'' என்கிறார்.
'பாலியல் தாக்குதல் குறித்த உண்மையை எப்போது சொல்லலாம் என்ற முறையை நமக்கு நாமே வைத்துக்கொள்வதால் நமக்கு தான் இழப்பு '' என்கிறார்.
எனக்கு தற்போது ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு வயது 8. அவள் எளிமையாக புரிந்துகொள்ளும் வண்ணம் நான் சொல்லியிருக்கிறேன் யாரவது உனது மறைமுக உறுப்புகளில் தொட்டால் அல்லது நீ சங்கடமாக உணர்ந்தால் கூச்சலிட்டு  கத்திவிடு. உடனடியாக அங்கிருந்து வெளியேறி யாரிடமாவது சொல். உன் மீது கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. உனது உடல் உனக்கானது என கூறியிருக்கிறேன்'' என கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. பத்ம லக்ஷ்மி சென்னையில் 1970-ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது பெற்றோர்கள் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். தனது தாயுடன் அவர் அமெரிக்காவில் வளர்ந்தார். தொலைக்காட்சி உலகில் பிரபலமான இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி ஆவார்.



இதில் மேலும் படிக்கவும் :