வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (21:59 IST)

இலங்கை தாக்குதல்: 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ் இயக்கம்

பொதுவாக ஒரு தாக்குதல் நடந்தால் அடுத்த சில மணி நேரங்களில் அந்த தாக்குதலுக்கு காரணமான இயக்கம் அறிவித்துவிடும். இரட்டை கோபுர தாக்குதல் முதல் புல்வாமா தாக்குதல் வரை இதுதான் நடந்து வருகிறது. ஆனால் இலங்கையில் தொடர் தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த இயக்கமும் பொறுப்பேற்காமல் இருந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இலங்கை அமைச்சர் ஒருவர் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று மட்டுமே கூறினார்
 
இந்த நிலையில் இலங்கையில் தாக்குதல் நடந்து சரியாக 50 மணி நேரம் கழித்து ஐஎஸ் இணையதளத்தில் இந்த தாக்குதலுக்கு தாங்களே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் ஏன்? என்பது குறித்து பல்வேறு காரணங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில தாக்குதல் நடத்த ஐஎஸ் இயக்கம் திட்டமிட்டிருக்கலாம் என்றும், அவை முறியக்கப்பட்டதால் தாமதமாக அறிவித்திருக்கலாம் என்றும் அல்லது ஒருசில அரசியல் நெருக்கடி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
ஐஎஸ் இயக்கம்தான் இலங்கை தாக்குதலுக்கு காரனம் என்பது உறுதியாகிய நிலையில் அந்த இயக்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு ஐநாவுக்கு கோரிக்கை வைக்கும் என தெரிகிறது