தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் : மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு

srilanka
Last Updated: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:40 IST)
இலங்கைக் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாக இண்டர்போல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்குண்டுவெடிப்பு பற்றி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்தததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 295 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று இலங்கையில் தேசிய துக்க தின நாள் அனுசரிக்கப்படவிருக்கிறது.
 
இந்த குண்டுவெடிப்பு சம்மந்தமாக விசாரணை நடத்த சிறப்புக்குழுவை அதிபர் மைத்ரிபால சிறிசேன அமைத்துள்ளார். அந்த குழுவில்  உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா, முன்னாள் போலீஸ் ஐஜி என்.கே.இலங்கக்கூன், சட்டம் - ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இந்த குழு விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த குழு விசாரணை மேற்கொள்ள இருக்கும் வேளையில் இண்டர்போல் அமைப்பு தனது கணடனத்தைப் பதிவு செய்ததோடு விசாரணைக்குத் தேவையான உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளது. இது தொடர்பாக சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக்குழு குண்டுவெடிப்பு சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகியப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதற்காக சிறப்பு நிபுணர்கள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என அறிவித்தது.
 
இந்நிலையில் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்ததற்காக மனிப்புக் கேட்டது இலங்கை அரசு.
srilanka
தற்போது இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜின் சேனரத்ன பேட்டியளித்துள்ளார். 
அவர் கூறியுள்ளதாவது :
 
இந்தத் தாக்குதல் குறித்து உளவுத்துறை போதுமான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தாமல் பாதுகாப்புக் குறைச்சலுடன் இருந்ததற்காகவும், 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :