1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (12:24 IST)

உக்ரைனுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பும் உலக சுகாதார மையம்!

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என உலக சுகாதார மையம் தகவல். 

 
உக்ரைன் மீது 8வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனில் வெளிவரும் மனிதாபிமான அவசரநிலை குறித்து உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து குறிப்பிடுள்ளதாவது, உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், அவசர அறுவை சிகிச்சைக்கான பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் பேரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பிற சுகாதார பொருட்கள் போலந்தில் தஞ்சம் அடைந்துள்ள உக்ரைன் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
அதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், மக்களோடு மக்களாக அகதிகளாக குவிந்திருப்பதால் மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.