காங்கிரஸ் தவிர்த்து யாருக்கும் மேயர் பதவி இல்லை! – திமுக வெளியிட்ட பட்டியல்!
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாநகராட்சிகளை கைப்பற்றிய நிலையில் பதவிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே மாநகராட்சி மேயர் பதவிகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில் காங்கிரஸுக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், காஞ்சிபுரம் துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.வேறு எந்த கூட்டணி கட்சிக்கும் மேயர் பதவி வழங்கப்படவில்லை.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் துணை மேயர் பதவியும், மதிமுகவுக்கு ஆவடி துணை மேயர் பதவியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் துணை மேயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன.