10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி அவசியமல்ல: பள்ளிக்கல்வித்துறை
10 11 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமா இல்லையா என்பது குறித்த குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது
இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் அல்ல என்றும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
மேலும் தேசிய கல்விக் கொள்கையில் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.