இரு மடங்காக பரவி வருகிறது ஒமிக்ரான்: உலக சுகாதார அமைப்பு தகவல்
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒமிக்ரான் வைரஸ் இருமடங்கு பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றரை முதல் மூன்று நாட்களில் ஒமிக்ரான் வைரஸ் இருமடங்காக பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.