1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India decreases

ஒரே நாளில் 7,145 பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,145 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,40,400 ஆக உயர்ந்தது. அதோடு புதிதாக 289 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,77,158 ஆக உயர்ந்தது.
 
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,706 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,71,471ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84,565 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்க உத்தரவு… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!