திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (10:42 IST)

2022 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரட்டும்: WHO!

2022 ஆம் ஆண்டு தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி தற்போது இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ளதால் இதனை உலக நாடுகள் தவிர்க்கும் படியும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 
 
இதனிடையே தற்போது 2020 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, 2021 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் தென் ஆப்பிரிக்காவின் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அது பல நாடுகளுக்கு பரவி வருகிறது. 
 
2022 ஆம் ஆண்டு தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும். 2022 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளும் எதிர்கால பேரழிவைத் தடுப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும், முதலீடு செய்யும் ஆண்டாகவும் இருக்க வேண்டும் என கோரியுள்ளது.