ஓவராய் பேசியதால் யூட்யூப் சேனலும் முடக்கம்! – மரண அடி வாங்கும் ட்ரம்ப்!

Prasanth Karthick| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (11:12 IST)
சமீபத்தில் அமெரிக்கா நாடாளுமன்ற தாக்குதலை தொடர்ந்து ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தற்போது யூட்யூப் சேனலும் முடக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி உறுதியான பிறகும் கூட நடப்பு அதிபர் ட்ரம்ப் பதவி விலகாமல் தொடர்ந்து கெடுபிடிகளை அளித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வன்முறை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் முடக்கியது. இந்நிலையில் தற்போது யூட்யூப் சேனல் மூலமாக வன்முறை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலை யூட்யூப் நிறுவனம் முடக்கியுள்ளது. வரலாற்றிலேயே ஒரு அமெரிக்க அதிபர் இந்த அளவுக்கு அசிங்கப்படுவது இதுவே முதல்முறை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :