ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 ஜூன் 2019 (09:15 IST)

எண்ணெய் கிணறுக்கு ரஜினிகாந்த் படத்தின் பெயர் வைத்த ரசிகர்!

பெங்களூரில் சாதாரண கண்டக்டராக இருந்த சிவாஜிராவ், மொழி தெரியாத தமிழகத்திற்கு வந்து சினிமாவில் நுழைந்து ரஜினிகாந்த் என பெயரை மாற்றி கடந்த நாற்பதாண்டுகளில் கடுமையாக உழைத்து இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். இந்திய அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருந்து வரும் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனக்கு சொந்தமான எண்ணெய் கிணற்றின் பெயரை சமீபத்தில் மாற்றியுள்ளார். அவர் தனது கிணற்றுக்கு ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் பெயரை வைத்து அதற்குரிய சான்றிதழையும் அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொள்ள, இதனை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
 
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள இந்த எண்ணெய் கிணறுக்கு ரஜினிகாந்த் பட பெயர் வைத்த தகவல் அந்த பகுதியில் பரவியதும் தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த கிணற்றை காண வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.