புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (12:53 IST)

ஏன் இந்த திடீர் பாய்ச்சல்? அடுத்தடுத்து சர்ச்சையை கிளப்பும் ஆடிட்டர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தாக்கும் விதத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 
 
மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.  
 
ஆனால் தேசிய அளவில் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளில் பாஜகவும், 7 தொகுதிகளில் பாமகவும், 4 தொகுதிகளில் தேமுதிகவும் தலா ஒரு தொகுதியில் புதிய தமிழகம், புதிய நீதி கட்சியும் படுதோல்வி அடைந்தது.  
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது, தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்திருந்தால் 5 இடங்களிலும் 4 முதல் 5 லட்சம் வித்தியாசத்தில் தோற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் இது யாருக்கு எதிரான அலை? என கேட்டுள்ளார்.  
பாஜகவின் தோல்வி அதிமுகவால்தான் ஏற்பட்டது என்பது போல இருக்கும் இந்த டிவிட்டால் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது மேலும் ஒரு டிவிட் போட்டுள்ளார் குருமூர்த்தி. அதில் எதிர்ப்பு அலை யாருக்கு என்ற டிவீட்டை நான் பதிவு செய்ததற்கு காரணமே மிகவும் பொறுப்பான இடத்தில் உள்ளவர்கள் மோடிக்கு எதிரான அலை வீசியதால்தான் தமிழகத்தில் பாஜக தோல்வி என பிரச்சாரம் செய்ததால்தான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால் அது உண்மையில்லை என பதிவிடுள்ளார். 
 
நடிகர் ரஜினிகாந்த்தான் தமிழகத்தில் பாஜகவிற்கு எதிரான அலை இருக்கிறது. எனவேதான் பாஜக தமிழகத்தில் தோல்வியடைந்தது என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.