ரஜினி வசனத்தை ஓபிஎஸ் பேசியதில் இவ்வளவு அரசியலா?
நேற்று இப்தார் நோன்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, 'நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்' என்று கூறினார். இந்த வசனத்தை சாதாரணமாக ஓபிஎஸ் கூறினாலும் அதன்பின்னர் பெரிய அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது
மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதது ஓபிஎஸ் அவர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாம். அதிலும் தனது சொந்த கட்சியினர்களே ஒருசிலர் இதற்கு காரணம் என்பதையும் அறிந்து ஓபிஎஸ் நொந்து போய்விட்டாராம். சீக்கிரமே மீண்டும் ஒரு தர்மயுத்தத்திற்கு அவர் தயாராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஒரு பெரும்படையுடன் ஓபிஎஸ் வெளியே வருவார் என்றும், அந்த அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார் என்றும், பாஜகவின் செல்வாக்கால் அதுதான் உண்மையான அதிமுக என நிரூபித்து இரட்டை இலை சின்னத்தையும் பெற்றுவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனை மனதில் வைத்துதான் நேற்று இப்தார் விழாவில் ஓபிஎஸ் பேசியதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு ஆங்கிள் இருப்பதை அறிந்து முதல்வர் ஈபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன