1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 26 பிப்ரவரி 2020 (10:35 IST)

வால்ட் டிஸ்னி சி.இ.ஓ திடீர் பதவி விலகல்: காரணம் என்ன?

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் என்பவர் திடீரென அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2005ம் ஆண்டு ராபர்ட் இகர் என்பவர் பொறுப்பேற்றார். இவர் இந்நிறுவனத்தின் 7வது சி.இ.ஓ  என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராபர்ட் இகர் சி.இ.,ஓவாக பொறுப்பெற்ற பின்னர் தான் பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோவை டிஸ்னியுடன் இணைக்கப்பட்டது. மேலும், மார்வெல், லூக்காஸ், 21 செஞ்சுரி பாக்ஸ்ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை வாங்கியது என டிஸ்னியின் வளர்ச்சிக்காக இவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் வருமானம் பெருமளவு உயர்ந்தது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓ.டி.டி பிளாட்பார்ம் மூலம் டிஸ்னி ப்ளஸ் ஸ்டிரீமிங் தளத்தை ராபர்ட் இகர் அறிமுகப்படுத்தினார். அறிமுகமான சில மாதங்களிலே 28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர், திடீரென தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்திருப்பது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தான் பதவி விலகியதற்கான காரணங்களை அவர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது