செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (15:30 IST)

பாலத்தில் செல்லும் வாகனங்கள் திடீரென மறைகின்றன: வைரலாகும் குழப்பமான வீடியோ

பாலத்தின் மேலே சென்றுகொண்டிருக்கும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திடீரென மறையும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

”ஆப்டிக்கல் இல்யூஷன்” எனும் மாய தோற்றத்தை உண்டாக்கும் தொழில்நுட்பங்கள் உலக அளவில் பிரபலமாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அவ்வாறு ”ஆப்டிக்கல் இல்யூஷன்” போன்ற ஒரு கோணத்தை பயன்படுத்தி பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரவுகின்றனர்.

அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர்  நதிக்கு மேலே உள்ள பாலத்தில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மறைவது போன்ற ஒரு வீடியோவை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த குழப்பமான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

எப்படி இவ்வாறு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மறைகின்றன என்று பல நெட்டிசன்கள் கேள்வி அந்த வீடியோவ பகிர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.