1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (20:45 IST)

20 ஆண்டுகளாக விற்பனை குறையாத வயாகரா...

ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த வயாகரா மாத்திரை பயன்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இதன் விற்பனை சரியாமல் எப்போதும் அதிகரித்த வண்ணமே உள்ளதாம். 
 
கடந்த 1990 ஆம் ஆண்டு இந்த மாத்திரை பி‌ஷன் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. உண்மையில் மார்பு தொற்றுநோய்க்காக கண்டு பிடிக்கப்பட்டதுதான் இந்த மாத்திரை. இதற்கு சில் டெனால்பில் என பெயரிடப்பட்டது.
 
ஆனால், இந்த மாத்திரைகள் எதிர்பாராதவிதமாக ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை அதிகப்படுத்தியது. இதனால், 40 வயதுக்கு மேல் ஆண்மைக் குறைவு ஏற்படும் ஆண்களின் குறையை போக்கும் வகையில் இந்த மாத்திரை மாற்றி அமைக்கப்பட்டது.
 
நீல நிறத்தில் மாற்றப்பட்டு வயாகரா என பெயரிடப்பட்டது. இந்த மாத்திரை 1998 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பல சோதனைகளுக்கு பிறகு விற்பனைக்கு வந்தது. 
 
கடந்த 20 ஆண்டுகளாக பல கோடி மாத்திரைகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. இந்த மாத்திரை தயாரிக்கும் கம்பெனி ஆண்டுக்கு ரூ.650 கோடி வருமானம் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.