செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (23:42 IST)

புத்தகம் எழுதிய ரசிகருக்கு ஷாக் கொடுத்த விஜய்

சமீபத்தில் விஜய் குறித்து இரண்டு புத்தகங்கள் வெளியானது. இந்த இரண்டு புத்தகங்களும் அமேசான் ஆன்லைன் நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்த நிலையில் ஐகான் ஆப் மில்லியன்ஸ் என்ற புத்தகம் அமேசானில் ஒருசில நாட்களில் விற்று தீர்ந்து ஸ்டாக் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இந்த அளவுக்கு மிக வேகமாக இந்த புத்தகம் விற்பனையாக டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் செய்த விளம்பரமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புத்தகத்தை சமீபத்தில் படித்த விஜய், இந்த புத்தகத்தை எழுதிய ரசிகர் நிவாசுக்கு போன் செய்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தாராம்.

மேலும் தான் இந்த புத்தகத்தை படிக்கும்போது மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததாகவும், தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் விஜய் தெரிவித்தாராம். விஜய்யின் போன்கால் வந்ததில் இருந்து நிவாஸ் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?