புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 மார்ச் 2018 (15:27 IST)

4 வயது சிறுமியை இணையத்தில் விற்ற தந்தை: அதிர வைக்கும் காரணம்...

அமெரிக்காவில் 4 வயது சிறுமியை அவளது தந்தை Play with Daddie's Little Daughter என்ற வசனத்துடன் இணையத்தில் பாலியல் தொழிலுக்காக விளம்பரப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி. இவன் தனது மகளை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துள்ளான். இந்த விளம்பரம் போலீஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
 
இது போன்று தனது மகளுடன் இருக்க வாடிக்கையாளர் ஒருவரிடம் 2 மணி நேரத்திற்கு 1000 டாலர் வசூலித்து மகளை அனுப்பி வைத்தது, இது போன்று சுமார் 70 பேரிடம் பேரம் பேசியது தெரியவந்துள்ளது. 
 
இந்நிலையில் இவர் மீது வழக்கு தொடரப்பட்டு 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவனுக்கு 75 வயது ஆகும் வரை பெயில் வழங்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.