உக்ரைனை ஆக்கிரமிக்க நினைத்தால் பதிலடி! – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க நினைப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.
அதுமுதலாக உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக ரஷ்யா தனது ராணுவ தளவாடங்களை உக்ரைன் எல்லை அருகே குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள அமெரிக்கா, உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.