1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (10:36 IST)

பிரதமர் உயிருக்கு எதாவதுனா உங்கள சும்மா விட மாட்டோம்! – போராளி குழுக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஈராக் நாட்டின் பிரதமர் மீது ரகசிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈராக் நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் முஸ்தபா அல் கமிதி. பிரதமர் ஆவதற்கு முன்பே உள்துறை தலைவராக இவர் இருந்தபோது அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததாக ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் பேசி வந்தனர். இந்நிலையில் அவர் தற்போது பிரதமராகியுள்ளதில் அமெரிக்காவின் ரகசிய பங்கு இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிரதமர் முஸ்தபா அல் கமிதியின் வீட்டின் மீது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டு நிரம்பிட ட்ரோன்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 7 பாதுகாப்பு படையினர் காயம்பட்ட நிலையில் பிரதமர் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில் இதுபற்றி பேசிய அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் “ஈராக் அரசின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட இந்த வெளிப்படையான பயங்கரவாத செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஈராக்கின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு பொறுப்பேற்றுள்ள அந்த நாட்டின் பாதுகாப்பு படைகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.