1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (22:47 IST)

உங்கள் அனைவரது அன்பிற்கும் தலைவணங்குகிறேன்- கமல்ஹாசன்

உங்கள் அனைவரது அன்பிற்கும் தலைவணங்குகிறேன்  என நடிகர் கமல்ஹாசன் தனது  டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன். இவர் நடிகராகவும், பாடகராகவும், வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும், நடனகலைஞராகவும் உச்சம் தொட்டவர்.

திரையுலகில் சகலகலா வல்லவன் என்ற பெயரெடுத்துள்ளவர். இவர் இன்று தனது 67 வது பிறந்தநாள் கொண்டாடு  வருகிறார். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் கமல்ஹாசன்    நன்றி தெரிவித்து ஒரு டுவீட் பதிவிட்டுளார். அதில், நேரிலும் தொலைபேசியிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரது அன்பிற்கும் தலைவணங்குகிறேன்  எனத் தெரிவித்துள்ளார்.