திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (14:59 IST)

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

alangatti rain
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்குத்திசையில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நாளை ( 03—1-23) ஆம் தேதி முதல்  6 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள கடலோர மாட்டங்கள், புதுச்சேரி , காரைக்கால் ஆகிய பகுதியில் உள்ள கடற்கரையோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.