புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (18:42 IST)

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

farmers
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50.88 கோடி இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது என்றும் இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்கள் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக 48 ஆயிரத்து 593 விவசாயிகளுக்கு 50.88 கோடி ரூபாய் மதிப்புள்ள  இடுபொருள் நிவாரணமாக வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனையடுத்து விவசாய சங்கங்கள் தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran