இந்தியா - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை 3வது முறையாக ஒத்திவைப்பு
அமெரிக்காவுடன் இந்திய அமைச்சர்கள் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கெல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் கடந்த ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதையடுத்து, வரும் ஜூலை 6ம் தேதி இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இருநாட்டு அமைச்சர்களும் பங்குகொள்வார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்த புதிதாக வேறு தேதியை முடிவு செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.