திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 ஜூன் 2018 (22:07 IST)

கடைசி ஓவரில் சரமாரியாக சரிந்த இந்திய அணி; அயர்லாந்துக்கு 209 ரன்கள் இலக்கு

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

 
இங்கிலாந்து தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதற்கிடையில் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
 
இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான், ரோகித் அயர்லாந்து பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய தவான் 74 ரன்கள் குவித்திருந்த போது ஆட்டமிழந்தார். 15 ஓவர் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 10 ரன்களில் வெளியேறினார்.
 
அதைத்தொடர்ந்து களமிறங்கிய தோனியும் 11 ரன்களில் வெளியேறினார். சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா கடைசி நேரத்தில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
 
பின்னர் களமிறங்கிய கோஹ்லி ரன் எதுவுமின்றி வெளியேறினார். கடைசி ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி பந்தில் மனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்து அசத்தினார்.
 
இதன்மூலம் இந்திய அணி 209 ரன்கள் இலக்கு வைத்துள்ளது.