கப்பலில் டன் கணக்கில் வந்த போதை பொருள்- மடக்கி பிடித்த அதிகாரிகள்

narcos
Last Modified புதன், 10 ஜூலை 2019 (11:58 IST)
அமெரிக்காவுக்கு கப்பல் மூலம் டன் கணக்கில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் வளைத்து பிடித்தனர்.

அமெரிக்காவில் ஆரம்பகாலம் தொட்டே போதைபொருள் பழக்கம் இருந்து வருகிறது. நார்கோஸ் எனப்படும் போதைப்பொருள் மாஃபியா கும்பல் உலகம் முழுவது பல பகுதிகளுக்கு போதை பொருட்களை கடத்தி வருகின்றனர். மெக்ஸிகோ, லத்தீன் அமெரிக்க நாடுகளை மையமாய் கொண்டு இவர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் போதை பொருட்களால் இவர்கள் பெரும் லாபம் ஒட்டுமொத்த அமெரிக்காவின் மாதாந்திர பட்ஜெட் தொகையைவிட அதிகம் என சொல்லப்படுகிறது.

உலகிலேயே மிக பிரபலமான கப்பல் சேவைத்துறை ஜே.பி.மோர்கன் அசட் மேனேஜ்மெண்ட். ஸ்விட்சர்லாந்தை தலைமையகமாக கொண்ட இந்த கப்பல் நிறுவனத்தின் கண்டெய்னர் கப்பல் ஒன்று சில நாட்கள் முன்பு அமெரிக்கா வந்தது. அதில் டன் கணக்கில் கொக்கைன் என்ற போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த கப்பலில் வந்த கண்டெய்னர்களை தீவிரமாக சோதித்தனர் அமெரிக்க அதிகாரிகள். அப்போது அதில் சுமார் 20 டன் கொக்கைன் (20 ஆயிரம் கிலோ) இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதன் தோராய மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அந்த கப்பல் ஊழியர்களை கைது செய்த அதிகாரிகள். அந்த கண்டெய்னர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :