திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (13:08 IST)

வெள்ளத்தில் மூழ்கிய வெள்ளை மாளிகை: அடமழையால் ஆட்டம் கண்ட அமெரிக்கா

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் கொட்டும் மழைக்கு முன் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் போல. இந்தியாவில் மும்பை பகுதியில் பெய்த பலத்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. அதுபோலவே அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலும் அதை சுற்றிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வருகிறது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் சாலையில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் மாளிகையின் தரைதளத்திலும் வெள்ளம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.