செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜனவரி 2018 (22:45 IST)

அமெரிக்க அரசு திடீர் முடக்கம்: சென்னை அமெரிக்க தூதரகம் இயங்குமா?

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில் இன்று திடீரென அமெரிக்க அரசு எந்திரம் முடங்கியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் அரசு துறைகளுக்கு நிதி வழங்குவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவின் காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சனி முதல் அரசு எந்திரம் முடங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அரசு முடங்குவதை தவிர்க்க பிப்ரவரி 16ஆம் தேதி வரை நிதியை வழங்க வகை செய்யும் இடைக்கால மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு 60 வாக்குகள் தேவை என்ற நிலையில் வெறும் 50 வாக்குகள் மட்டுமே மசோதாவுக்கு ஆதரவு கிடைத்தததால் மசோதா நிறைவேறவில்லை

இதனால் குடியேற்றம், பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பல துறைகளுக்கு நிதியை ஒதுக்க முடியவில்லை. இதனால் அமெரிக்க அரசே முடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வழக்கம் போல் இயங்கும் என்றும் விசா உள்ளிட்டவைக்கு விண்ணப்பித்தோர் குறித்த காலத்தில் துணை தூதரகத்துக்கு வரவேண்டும் என்றும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.