ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (22:15 IST)

அமெரிக்காவில் விமான என்ஜினில் சிக்கி ஊழியர் பலி...

America
அமெரிக்க நாட்டில் அலபாமா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் ஒரு விமானத்தின் என்ஜினில் சிக்கி விமான ஊழியர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கக நாட்டின் அலபாமா மா நிலம் மாண்ட்கோமெரி என்ற நகரில் ஒரு விமான நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் கீழிறங்கியதும், விமானங்கள் நிறுத்தும் இடத்டிஹ்ல் அந்த விமானம் நிறுத்தப்பட்டது.

ஆனால், ஒரு என்ஜினில் மட்டும் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், ஒரு விமான ஊழியர் விமானத்தின் அருகில் சென்றபோது, என்ஜின் அரை இழுக்கவே அவர் அதனுள் சிக்கிக் கொண்டார்.

அவரை சக ஊழியர்கள் மீட்பதற்குள் அவர் சம்பவ்வ இடத்திலேயே பலியானார்.  இதுகுறித்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.