1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு: காவல்துறையினர் உள்பட பலர் காயம்

அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இன்று காலை திடீரென மர்ம மனிதர் ஒருவர் பொதுமக்களிடையே கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
அமெரிக்காவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதனை அடுத்து அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் காவலுக்கு இருந்த காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர் 
 
இதனை அடுத்து அதிரடியாக நுழைந்த அதிரடிப்படையினர் அந்த மர்ம மனிதனை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அந்த மனிதனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் துப்பாக்கியால் சுட்ட நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது