வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:41 IST)

விமானங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல 8 நாடுகளுக்கு அமெரிக்கா தடை

மத்திய கிழக்கின் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்பவர்கள் லேப்டாப் உள்ளிட்ட எந்தவொரு எலக்ட்ரானிக் பொருட்களையும் விமானத்தில் கொண்டு செல்ல கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்



 


இதுகுறித்து அமெரிக்க விமானத்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, ' எகிப்தின் கெய்ரோ, ஜோர்டானின் அம்மான், குவைத்தின் குவாத் சிட்டி, மொராக்கோவின் கசபாலான்கா, கத்தாரின் தோகா, சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா, துருக்கியின் இஸ்தான்புல், அபுதாபி மற்றும் துபாய் ஆகிய விமான நிலையங்களில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் மின்னணு பொருட்களை கொண்டு செல்ல தற்காலிக தடை விதித்துள்ளதாகவும், இருப்பினும் மொபைல் போன், மருத்துவ சாதனங்களுக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்து உளவுத்துறை கூறிய ஒரு முக்கிய தகவலின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த தடை நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.