ஏமாற்றிய ஆண் காவலர்...மனம் உடைந்த இளம் பெண் வார்டன் தற்கொலை...

warden
Last Modified திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:46 IST)
சமீப காலமாக காதல் தோல்வியால் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் தான் இந்த விஷயத்தில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல இந்த சம்பவமும் நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் பெரியகாட்டுப் பாளையத்தில் வசித்து வந்தவர் செல்வி. இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
செல்விக்கு நேற்று இரவு பணி என்பதால் அவர் வெகு நேரமாகியும் பணிக்கு வராதது கண்டு  செல்பேசியில் அவருக்கு போன் செய்து பார்த்தார்கள். செல்வியின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சக போலீஸார் காவல் குடியிருப்பிற்குச் சென்று பார்த்தபோது செல்வி பெட்ரூமில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
பின்னர் செல்வியின் உடலை செல்வியின் கைப்பற்றிய போலீஸார் அவரது பெற்றோருக்கு தகவல் சொல்லிய பின் , தங்கள் விசாரணையைதீவிரப்படுத்தினர்.
 
இதனையடுத்து செல்வியின் மரணத்திற்கு காரணம் விவகாரம் என்பது தெரியவந்தது. அதாவது, செல்வி, போலீஸை காரர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு வரும் 6 ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன்  திருமணம் நடக்க உள்ளதால் மனவேதனை அடைந்த  செல்வி தற்கொலை செய்து கொண்டாரா என்ற ரீதியில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
அவ்வப்போது மன அழுத்தங்களாலும் மன உளைச்சலுக்கு ஆளாவதாலும், போலீஸார் தற்கொலை செய்வது,  சமீப காலமாக அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றுக்கு முன் தினம் கூட சென்னையில் ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது மற்றொரு சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :