செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (17:46 IST)

போர்களில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை: ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகில் நடைபெற்ற போர் மற்றும் கலவரங்களால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கையை குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே ஏமன் மற்றும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதே போல் ஆஃப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும் அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நடந்து வருகிறது. மேலும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே மோதல்கள் நடந்துவருகின்றன.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு உலகத்தில் நடைபெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் குறித்து ஐ.நா. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆண்டு மட்டுமே சிரியா, ஏமன், பாலஸ்தீனம், ஆஃப்கானிஸ்தான், ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போர் காலங்களில், குழந்தைகள் மீது பாலியல் வன்முறைகள், குழந்தைகளை கிளர்ச்சியாளராக பயன்படுத்துதல், பள்ளிகள் மீதான தாக்குதல் ஆகிய பல்வேறு வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன எனவும் கூறியுள்ளது.