செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:36 IST)

ரஷ்ய ராணுவத்தின் பிடியில் இருந்து கார்கீவ் நகரை மீட்டது உக்ரைன்: தீவிரமாகும் போர்

ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்து கார்கீவ் என்ற நகரை மீட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கார்கீவ் என்ற நகரை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளதாக ரஷ்யா தெரிவித்தது.
 
இந்த நிலையில் பதிலடி கொடுத்த உக்ரேன் மீண்டும் கார்கீவ் நகரை மீட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.
 
இன்று காலையில் மீட்டு நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம்  அறிவித்த நிலையில் ஒரு சில மணி நேரங்களில் கார்கீவ் நகரை  உக்ரைன் நாடு கார்கீவ் மீட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது