வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (11:29 IST)

மகாத்மா காந்தியின் தபால் தலையை வெளியிட்ட ஐ.நா.

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.தலைமையகம் காந்தியை கௌரவிக்கும் வகையில் காந்தியின் தபால் தலையை வெளியிட்டுள்ளது.

ஐ.நா.தலைமையகத்தில் ”தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமெரிக்காவுக்கு சென்றுள்ள மோடி கலந்துகொண்டார். அவருடன் சிங்கப்பூர், நியூஸிலாந்து, வங்கதேசம், ஜமைக்கா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டனர்.

அனைவரும் சேர்ந்து நியூ யார்க் நகரில் காந்தி அமைதி பூங்காவை திறந்துவைத்தனர். பின்பு அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ”மஹாத்மா காந்தி இந்தியா மட்டுமல்ல, உலகத்தின் அமைதியை ஊக்குவித்தவர்” என்று புகழ்ந்து கூறினார்.

பின்பு, மோடியுடன், அதில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, மகாத்மா காந்தியின் 150 ஆவது ஆண்டின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் விதமாக காந்தியின் தபால் தலையை வெளியிட்டனர்.