வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (08:40 IST)

தப்பிச்சு போகக் கூட விட மாட்டேங்கிறாங்க..! – ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் புகார்!

உக்ரைனில் சிக்கியுள்ள மக்களை மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றுவதை கூட ரஷ்யா தடுப்பதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 13 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூகமான தீர்வுகள் ஏற்படவில்லை. இதனால் மேலும் போர் தொடரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மக்களை மனிதாபிமான அடிப்படையில் வெளியேற்றுவதை கூட ரஷ்யா தடுப்பதாகவும், மக்களுக்கு மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லும் சாலைகளை ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.