1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (15:54 IST)

போரை நிறுத்தியதற்கு நன்றி.. செலன்ஸ்கியோடு நேரா பேசுங்க! – புதினுக்கு மோடி கோரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனில் உள்ள பிற நாட்டவர்கள் அங்கிருந்து எல்லை வழியாக தப்பி செல்லும் நிலையில், உக்ரைன் மக்களே பலர் அகதிகளாகி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரஷ்யா உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. போரை தற்காலிகமாக நிறுத்தியது குறித்து ரஷ்ய அதிபருக்கு தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் போர் தொடராமல் நேரடியாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியோடு பேசி சுமூக முடிவை எட்ட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.