1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 மார்ச் 2022 (08:17 IST)

உக்ரைன் - ரஷ்யா 3வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போர் தொடரும் என தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த இரு நாட்டு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மட்டும் செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் என்று செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.