செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (15:25 IST)

6 நாட்களில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி! – உக்ரைன் அதிபர் தகவல்!

உக்ரைனில் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் பலியான ரஷ்ய வீரர்கள் குறித்து உக்ரைன் தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா மெல்ல மெல்ல தாக்கி அபகரித்து வருகிறது.

உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளபோதிலும் தொடர்ந்து உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவம் மீது தாக்குதலை நடத்தி வருகிறய்ஜி. இந்நிலையில் போர் நடந்து வரும் கடந்த 6 நாட்களில் உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.