புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (08:45 IST)

உக்ரைன் விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தாங்கள் தனித்து விடப்பட்டதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா கடும் விலை தர வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது
 
இந்த நிலையில் உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் போர் அல்ல என்று கூறிய சீனா அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் ரஷ்யாவுக்கு இன்னொரு நாட்டின் உதவி தேவைப்படாது என்றும் அந்நாடு தன்னளவில் உலகில் மிகப்பெரிய வலிமை மிக்க நாடாக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது