வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (13:17 IST)

கார் ஓட்டும் அழகிய பூனை: வைரலாகும் வீடியோ

ஒரு அழகிய பூனை கார் ஓட்டுவது போல் வெளியான ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்கள் செய்யும் சேட்டைகளை, வீடியோ எடுத்து இனையத்தில் பதிவிடுவது தற்போது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு பெரும் வரவேற்பும் கிடைக்கிறது. இதே போல் ஒருவர் தன்னுடைய செல்லபிராணியான பூனைக்கு ரிமோட் மூலமாக இயங்கும் ஒரு சிறிய காரை பரிசளித்துள்ளார்.

அந்த சிறிய காரின் மேல் பூனை அழகாக உட்கார்ந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே பயணம் செய்கிறது. இதனை அந்த வீட்டின் உரிமையாளர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் கீழ் பல பூனை பிரியர்கள் ” க்யூட் கிட்டி (cute kitty) என்றும், க்யூட் பாவ்ஸ் (cute paws) என்றும் அன்புகளை தெரிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.