’நம்ம வீட்டுப்பிள்ளை’ ஆன சிவகார்த்திகேயன் – ஆயுதபூஜை கொண்டாட்டம் !

Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:58 IST)
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு நம்ம வீட்டுப்பிள்ளை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதியப் படத்தின் மூலம் பாண்டிராஜும் சிவகார்த்திகேயனும் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர். எஸ் கே 16 எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனோடு அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா உள்ளிட்டவர்கல் நடிக்கின்றனர். இப்படத்துக்கு  எங்க வீட்டுப் பிள்ளை என எம்.ஜி.ஆர் படத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்காக விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தை விரைவாக முடித்து ஆயுதபூஜைக்கு ரிலிஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு நம்ம வீட்டுப் பிள்ளை எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.ஜி. ஆர் படத்தின் தலைப்பான எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பு வைக்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்போது அதை லேசாக மாற்றி நம்ம வீட்டுப் பிள்ளை என வைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



இதில் மேலும் படிக்கவும் :